6வாட்ஸ்அப் வடிவேலு – 17

public

அனைவரும் பின்பற்ற வேண்டிய எளிய பாதுகாப்புக் கவசங்கள்:

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் மிகவும் பாதுகாப்பாக வாழ்வது மிகவும் முக்கியம். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் நோய்கள் மிகவும் எளிதாகப் பரவுகின்றன. நம்முடைய பொருள்களுக்கோ, நமக்கோ பாதுகாப்பில்லை. நமக்கே தெரியாமல் நம்முடைய நடவடிக்கைகள் கவனிக்கப்படுகின்றன என்றெல்லாம் கூறுகிறார்கள். நம்முடைய அக்கவுன்ட்டில் இருந்து பணம் திருடப்படுவது, காணாமல் போன டேங்கர் லாரி, அவ்வளவு ஏன் திருட்டை கண்டுபிடிக்க வைத்திருந்த சிசிடிவி கேமராவையே நம்மாட்கள் ஆட்டையைப்போடும் அற்புதங்கள் ஆகியவற்றையெல்லாம் கண்கூடாகக் கண்டு, கடந்து வருகிறோம். சரி, திருட்டைத் தடுக்க அதற்கான பாதுகாப்பு கவசங்கள் அணிந்துகொண்டு வாழ்வது சாத்தியமா? சாத்தியம்தான்.

தண்ணீர் குடிக்கிற டம்ளரைக்கூட நம்மாட்களுக்கு விட்டுவிட மனசு வராது. அதுக்கு அதைவிட காஸ்ட்லியாக ஒரு செயினை வாங்கி கோத்து பாதுகாக்க வேண்டும்.

சாதாரண டம்ளருக்கே இந்த கதி என்றால், செருப்பு முதற்கொண்டு கம்ப்யூட்டர் வரை நாம் அனைத்துப் பொருள்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சில அத்தியாவசியப் பொருள்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனை கூகுளின் உதவியோடு பார்க்கலாம். முதலில் சைக்கிளைப் பாதுகாப்பது எப்படி? நாம் எப்படி பூட்டு போட்டு சென்றாலும் பலே திருடர்கள் அலாக்காகத் தூக்கிச் சென்றுவிடுகின்றனர். எனவே முடிந்தவரை எவ்வளவு பூட்டு போட முடியுமோ அத்தனை பூட்டையும் போட்டுவிட வேண்டியதுதான்.

அடுத்து மிக முக்கியமான ஒன்று செருப்பைப் பாதுகாப்பது. கோயில்களில் இதற்கென்றே ஒரு தனிக்கூட்டம் உள்ளது. ‘டோக்கன் போட்டு அதற்கு இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டுமா’ என கஞ்சத்தனம் பார்த்தால், பிராண்டட் செருப்பு வாங்கி அதையெல்லாம் செல்ஃபி எடுத்துப்போட்டு வாங்கின லைக்ஸ் எல்லாம் வீணாக போய்விடும், பார்த்துக்கோங்க.

“சாதா செருப்புனாலும் அது காசு கொடுத்து வாங்கியதாச்சே… அதனால போடுங்க இன்னொரு பூட்டு.”

‘சைக்கிளுக்கே இப்படி யோசிச்சோம்னா பைக், கார் இதையெல்லாம் எப்புடிங்க பாதுகாக்கிறது? இதுல ஹெல்மெட் வேற தூக்கிக்கிட்டே அலையணுமே’… கவலை வேண்டாம். அதுக்கும் ஐடியா இருக்குங்க… வண்டியோட வீல்லயே ஹெல்மெட்ட இணைத்து பூட்டிவிடலாம்.

நம்முடைய மொபைல்போனைப் பாதுகாக்கவும் ஒரு பூட்டுதான் போட வேண்டியுள்ளது. முடிந்தால் ஒரு பூட்டுக்கு பாதுகாப்பா இன்னொரு பூட்டும் போடலாம். முக்கியமாக பேருந்துகளில் செல்லும்போதோ, திருவிழாக்களில் கூட்டத்தில் மிதந்து செல்லும்போதோ இந்த ஐடியாவை பின்பற்றலாம்.

தண்ணீரில் குளிக்கும்போது நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி? அதற்கும் வழி இருக்கிறது. தெர்மாக்கோல் அல்லது காலி வாட்டர் பாட்டிகளைக் கட்டிக்கொண்டு குளிக்கும்போது, நாம் கடல் நீரோடு சேர்ந்து ஆவியாவதைத் தடுக்கலாம்

கம்ப்யூட்டரிலிருந்து வெளியாகும் வெப்பம் நம் உடல் நலத்துக்குத் தீங்கானது… தொடர்ந்து கம்ப்யூட்டரை பார்ப்பதன் மூலம் கண்கள் பாதிப்படைகிறது என பலரும் கூற கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கும் ஓர் எளிய வழி உள்ளது.

மனைவியின் பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிக்க பூங்கொத்து கொடுக்கலாம். இல்லாத பட்சத்தில் தெருவில் எட்டிப்பார்த்துவிட்டு காலில் விழலாம்.

எத்தனையோ பாதுகாப்பு வழிகள் இருந்தாலும் இதுபோன்ற பாதுகாப்பு செய்திகளை மக்களிடையே கொண்டுசேர்க்கும் கடமை நம்மிடத்தில் உள்ளது.

தொடரும்…

#கிரேஸி_கோபால்

[வாட்ஸ்அப் வடிவேலு 1](https://minnambalam.com/k/2017/09/06/1504636223)

[வாட்ஸ்அப் வடிவேலு 2](http://www.krypto.in/k/2017/09/07/1504722620)

[வாட்ஸ்அப் வடிவேலு 3]( https://minnambalam.com/k/2017/09/08/1504809024)

[வாட்ஸ்அப் வடிவேலு 4]( https://www.minnambalam.com/k/2017/09/09/1504895426)

[வாட்ஸ்அப் வடிவேலு 5]( https://www.minnambalam.com/k/2017/09/10/1504981813)

[வாட்ஸ்அப் வடிவேலு 6]( https://www.minnambalam.com/k/2017/09/11/1505068208)

[வாட்ஸ்அப் வடிவேலு 8](http://minnambalam.com/k/1505241024)

[வாட்ஸ்அப் வடிவேலு 9](http://minnambalam.com/k/2017/09/15/1505413818)

[வாட்ஸ்அப் வடிவேலு 10](http://minnambalam.com/k/1505500209)

[வாட்ஸ்அப் வடிவேலு 11!](http://minnambalam.com/k/1505588060)

[வாட்ஸ்அப் வடிவேலு 12](http://minnambalam.com/k/1505673016)

[வாட்ஸ்அப் வடிவேலு 13](https://www.minnambalam.com/k/2017/09/19/1505759413)

[வாட்ஸ்அப் வடிவேலு 14](http://minnambalam.com/k/1505845823)

[வாட்ஸ்அப் வடிவேலு 15](http://minnambalam.com/k/1505932386)

[வாட்ஸ்அப் வடிவேலு 16](http://minnambalam.com/k/1506018619)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0