6சாஹோ ரிலீஸ் அப்டேட்!

Published On:

| By Balaji

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் ஆக்‌ஷன் திரைப்படம் என்ற விளம்பரத்துடன் இதன் செய்திகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், அதன் நாயகன் பிரபாஸ் மீதான பாக்ஸ் ஆபிஸ் கவனம் மேலும் அதிகமாகியது. இதன் இரண்டு பாகங்களும் சேர்த்து மொத்தம் 1800 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பாகுபலி படத்திற்காக 4 வருட காலம் வேறெந்த படங்களிலும் நடிக்காமலிருந்த பிரபாஸ், அதன் பின் தேர்வு செய்த படமென்பதால் சாஹோ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. 2017ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு கிராபிக்ஸ் காட்சிகளின் நேர்த்திக்காகவும் இறுதிக் கட்ட பணிகளுக்காகவும் இவ்வளவு காலங்கள் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (மே 21) வெளியான அறிவிப்பில், சாஹோ படம் இவ்வருடம் ஆகஸ்டு 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இதனுடன் வெளியான பிரபாஸ் கூலிங் கிளாஸ் அணிந்துள்ள போஸ்டர் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

300கோடி ரூபாய் செலவில் உருவான இப்படத்தை வம்சி-பிரமோத் தயாரித்துள்ளனர். சுஜித் இயக்கியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்க, நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷங்கர்-இஷான்-லாய் இசையமைக்கின்றனர். ஒளிப்பதிவு மதி, படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், கலை சாபு சிரில் என முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.

மேலும் இந்தியாவின் மிகப்பெரும் ஆக்‌ஷன் திரைப்படம் என்ற விளம்பரத்துடன் வரும் சாஹோவில் டெர்மினேட்டர், மிஷன் இம்பாஸிபிள், ரஷ் ஹவர் போன்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் இதிலும் பங்கேற்றுள்ளனர்.

.

.

**

மேலும் படிக்க

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)

**

.

.

**

[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)

**

.

**

[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share