ஐடி விங் ஆள் ஒருத்தர் கூப்டாப்ல. “என்ன பாஸு, எங்க சோஷியல் மீடியா பிரச்சாரத்தால ரெண்டு தொகுதி இடைத்தேர்தல்லயும் கெலிச்சிட்டோம் பாத்தியா?” ன்னு கேட்டுட்டு சிரிச்சாப்ல. “அட யோவ், நீ கெலிச்சதுக்கு வாழ்த்து வேணும்னாலும் சொல்றேன். ஆனா, சோஷியல் மீடியாவால தான் கெலிச்சீங்கன்னு மட்டும் சொல்லாத. அப்படி சோஷியல் மீடியா இம்பேக்ட்ல கெலிக்கணும்னா… ‘அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட நபர்’, ‘அதிக டிஸ்லைக் வாங்கிய நபர்’, ‘அதிக மீம்ஸில் இடம்பெற்றவர்’ அப்படின்னு தான் எலெக்ஷன் வைக்கணும். அப்படி வெச்சாலும், எடப்பாடி முதல்வரா இருக்கமுடியாது. எங்க கண்டெண்ட் தளபதி ராஜேந்திர பாலாஜி தான் சி.எம்-ஆக முடியும்” அப்டின்னேன். என்ன யோசிச்சானோ தெரியல, திடீர்னு “அப்பவும் எங்கண்ணன் ஓ.பி.எஸ். துணை முதல்வர் தானா?’ இருடா உன்னய ரிப்போர்ட் பண்றேன்’னுட்டு கட் பண்ணிட்டார். இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன். சரி, நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் போய் அம்மா சமாதில தியானம் பண்ணிட்டு வர்றேன்.
**செந்திலின்_கிறுக்கல்கள்**
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி- இல.கணேசன்# அப்ப அம்மாவோட ஆவி பழி வாங்கலையா சார்..!
**கோழியின் கிறுக்கல்!!**
தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி என்ற செய்தியை கேட்டவுடன் சிலிர்த்து சில்லறையை சிதற விட்டால் நீங்கள் நல்லவர்!
ஏற்கனவே அனுமதி கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சு என்று கேட்டால் நீங்க Anti Indian!!
மனிதம் ????pic.twitter.com/eyoorzsex2
— ????எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) October 24, 2019
**கடைநிலை ஊழியன்**
கோவத்தை உப்பு போல பயன்படுத்தனும் !!
குறைந்தால் மரியாதை போயிரும் !!
கூடினால் மதிப்பு போயிரும் !!
**SHIVA SWAMY.P**
பத்து ரூபா டிரான்ஸ்பர் செஞ்சாக்கூட OTP அனுப்பி கன்பார்ம் செயயறீங்க,
இதைப்போலவே நாட்ல நடக்குற முக்கியமான தேர்வுகளில் இந்தமாதிரி மெத்தேடை (OTP, BIOMETRIC) பயன்படுத்தலாமே மைலார்ட் !!!
**Mr.கட்டெறும்பு**
வாழ்ந்த வாழ்க்கைக்கு நினைவுகளும்,
வாழா வாழ்க்கைக்கு கற்பனைகளுமே (மறு) உயிரூட்டுகின்றன..!
**செந்திலின்_கிறுக்கல்கள்**
அப்பாக்களும் தாத்தாக்களும் சுமந்த மஞ்சபையில் இருக்கிறது பண்டிகைகளுக்கான சீக்ரெட் என்ர்ஜி…!
**கோழியின் கிறுக்கல்!!**
நண்பன்: எவன் தலையிலயாவது கரு கருன்னு முடியிருந்தால் கடுப்பாகுது மச்சான்!!
மீ: எவன் தலையிலும் முடியிருந்தாலே எனக்கு கடுப்பாகுதுடா!!!
Dancing time???? pic.twitter.com/nR61d3kXHz
— Attractive Nature ???? (@NatureAttracts) October 24, 2019
**Fathima Firdaus**
சத்தியமாக யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்பதெல்லாம்..
இன்னொரு சத்தியம் வாங்கிட்டு சொல்லப்பட்டு விடுகிறது.
**Mr.கட்டெறும்பு**
அதிகமாக கேள்வி கேட்கும் மனைவியிடம் கோவப்படாதீர்கள்.
ஏன்னா அதீத கேள்வியில் தான் அக்கறையும் அடங்கி இருக்கும்.அந்த அக்கறையில் தான் காதலும் வெளிப்படும்..!
**மெத்த வீட்டான்**
மோடி தமிழகம் வந்ததால் அதிமுக வெற்றி – இல.கணேசன்
நாடாளுமன்ற தேர்தலில் பல தடவை வந்தாரே அப்போ ஏன் தோற்றார்கள் ?
ஹா ஹா ????????????#இனிய_காலை pic.twitter.com/W5llD4vPll
— ????எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) October 24, 2019
**தூயோன்**
இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் போகிறது – மோடி!
இவ்ளோ நாளா வழி தெரியாம ஒத்தையடி பாதையில தாவி ஓடிட்டு இருந்துருக்கும் போல.
**பாட்டி வைத்தியம்**
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசளைக் கீரை, பீட்ரூட் போன்றவற்றை உண்பதால் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், இதில் இருக்கும் விற்றமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது
இஞ்சி, மிளகு இரண்டையும் அரைத்து சாப்பிட்டு வர ஜீரணம் ஏற்படும். தொப்பை குறைய தினம் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி குடித்து வர தொப்பைக் குறையும்
**SHIVA SWAMY.P**
கூட்டத்தில் ஒருவனாக இருக்க போராட தேவையில்லை,
கூட்டத்தில் முதல்வனாக இருக்கத்தான் போராடவேண்டும்!
-லாக் ஆஃப்
�,”