uதிருப்பதி: பஸ் டிக்கெட்டுடன் தரிசன டோக்கன்!

Published On:

| By Balaji

தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திருப்பதியில் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் முன்பதிவு டிக்கெட்டுடன் ரூ.300 தரிசன டிக்கெட்டும் விநியோகிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தன. இதன் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா தொற்றுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் வரை தினமும் 20,000 பக்தர்கள் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலமும், 10,000 பக்தர்கள் இலவச தரிசனத்திலும் சென்று வந்தனர். தற்போது இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த வாரம் மேலும் கூடுதலாக 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு பஸ்களில் முன்பதிவு டிக்கெட் பெறும்போது ரூ.300 தரிசன டிக்கெட் வினியோகம் செய்யும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் தினமும் 1,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

சென்னை, வேலூர், பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் இருந்து திருமலைக்குச் செல்லும் பஸ்களில் முன்பதிவு டிக்கெட் பெறும்போதே அதற்கேற்ப சாமி தரிசனத்துக்கான நேரமும் குறிப்பிடப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share