6விமானிகள் பறக்க தடை!

Published On:

| By Balaji

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விமானிகள் மற்றும் கேபின் குழுவினர், அடுத்த 48 மணி நேரத்திற்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, விமானிகளும், கேபின் குழுவினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட அரைமணி நேரம் வரை எதிர்விளைவுகள் எதுவும் இருக்கிறதா என்பது கண்காணிக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொண்ட விமானிகள், கேபின் குழுவினர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு விமானத்தில் பறக்க தகுதியில்லாதவர்கள் என மருத்துவ ரீதியாக கருதப்படுவதால், அவர்களுக்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பணிக்கு வருபவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். விமானிகள் எந்தவொரு மருந்துகளும் இல்லாமல் அறிகுறியற்றவர்களாக இருந்தால், அவர்கள் பறப்பதற்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்படும். இதற்கு மருத்துவ பாதுகாப்பு சான்றிதழ் அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share