தடம் மாறா வரலாறு -வற்றாத புகழாறு: கவிஞர் அறிவுமதி

Published On:

| By Balaji

பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புகழ் பெற்ற தமிழ் கவிஞர் அறிவுமதி, பேராசிரியருக்கு கவிதை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தன்மான அடலேறே!

தடம்

மாறா

வரலாறே!

இளம்

வயதில்

உன்

பேச்சை

எப்படி

நான்

குடித்திருப்பேன்!

என்

ஊரில்

உன்

நூல்கள்

எத்தனை

நாள்

படித்திருப்பேன்!

பெரியாரைப்

பின்

தொடர்ந்த

பிழையற்ற

புத்தகமே!

அண்ணாவின்

அடி

நடந்த

ஆற்றல்

மிகு

வித்தகமே!

அண்ணாமலை

கொடுத்த

அருந்

தமிழின்

பேராசான்!

என்னாளும்

பகுத்தறிவை

எடுத்

தியம்ப

நா

கூசான்!

எத்தனை

நாள்

எத்தனை

ஊர்

காடென்றும்

பார்க்காமல்

கரம்பென்றும்

பார்க்காமல்

கால்

நடையாய்

ஓடோடி

களத்

தமிழை

விதைத்தவரே!

அமைச்சரென

இருந்தாலும்

அமைச்சரவை

இழந்தாலும்

கடுகளவும்

பிறழாமல்

கட்சியினை

மதித்தவரே!

கலைஞருடன்

உழைத்தவரே!

எம்

வயசுப்

பிள்ளையெலாம்

உம்மால்

தாம்

உருவானோம்!

இன்று

வரை

இழை

பிசகா

கொள்கையிலே

உரமானோம்!

காலமெலாம்

எங்களுக்கே

கனிவோடு

வகுப்பெடுத்தாய்!

காலம்

வந்து

வயது சொல்ல

கட்டாய

விடுப்பெடுத்தாய்!

செய்தித் தாள்

விற்றவரின்

செல்ல

மகன்

‘வரலாறு’!

அட…

செத்தாலும்

வற்றாது

‘அன்பழகன்’

புகழாறு!

**- பாவலர் அறிவுமதி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share