<ஓராண்டு தலைமை நீதிபதி!

Published On:

| By Balaji

hசென்னை உயர் நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி, மேகாலயாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பொறுப்புத் தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஏ.பி.சாஹிக்கு தலைமை நீதிபதியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

அம்ரேஷ்வரர் பிரதாப் சாஹி 1959ஆம் ஆண்டு பிறந்தார். 1985 ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2004ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005ல் நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ஏ.பி.சாஹியின் பதவிக் காலம் 2020 டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share