Pவிஜய் தந்தை மீது மோசடி வழக்கு!

Published On:

| By Balaji

நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து, நடித்த திரைப்படம் டிராபிக் ராமசாமி. இந்தத் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை 3 கோடி ரூபாய்க்கு தருவதாகக் கூறி பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம் இருந்து எஸ்.ஏ.சந்திரசேகர் 21 லட்சம் ரூபாய் பணத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் போட்டதாக கனடாவில் வசித்துவரும் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பில் புகார் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர் மணிமாறனின் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி நடந்துகொள்ளாமல், படத்தை தானே வெளியிடுவதாகக் கூறி அதனை எஸ்.ஏ.சந்திரசேகர் ரத்து செய்துவிட்டு, பிரம்மானந்தம் சுப்பிரமணியனிடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பியளிப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகர் உறுதியளித்ததாகவும், திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகின்ற நிலையில் இதுவரை பணம் திருப்பியளிக்கப்படவில்லை என்றும் புகார் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் மணிமாறன், “பணத்தை திருப்பிக் கேட்ட பிரம்மானந்தம் சுப்பிரமணியனிடம் சந்திரசேகர் பணத்தை திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதால் தற்போது அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share