இரவுநேர ஊரடங்கு: 547 வாகனங்கள் பறிமுதல்!

Published On:

| By Balaji

சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கின்போது, விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் 312 இடங்களில் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

முதல்நாளான நேற்று ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினாலும், இரவுநேர ஊரடங்கு என்று தெரிந்திருந்தும் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி, நேற்று சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் அடங்கும். மேலும் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share