yசென்னை: மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்!

public

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ,500 அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 567 பேர். இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1699 பேருக்கும், திருவிக நகரில் 1032 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சென்னையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.

அப்படி வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பிலும், போலீசாரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சிலர் முகக்கவசம் அணிவதில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது.

இந்நிலையில் சென்னையில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 179-ன் கீழ் போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனர் .

அண்ணா சாலையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதை ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பொதுவெளியில் வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் அதை அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்துக் காவலர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனத்தில் வருபவர்கள் மாஸ்க் அணியாமல் வந்தால் 500 ரூபாயும், நடந்து வருபவர்களுக்கு 100 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *