uதூத்துக்குடியில் ரூ.500 கோடி கருவாடு தேக்கம்!

Published On:

| By Balaji

இலங்கையில் இந்தியாவில் இருந்து வரும் மீன்கள் மற்றும் கருவாடு வகைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இதனால் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் தூத்துக்குடியில் தேக்கம் அடைந்துள்ளதாக அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் மற்றும் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் உள்ள 10 கடலோர மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் பிடித்துவரும் மீன்களில் சுமார் 17 சதவிகிதம் மீன்கள் பதப்படுத்தப்பட்டு உயர்ந்த வகை கருவாடுகளாகப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

தற்போது அண்டை நாடான இலங்கையில் இந்தியாவில் இருந்து வரும் மீன்கள் மற்றும் கருவாடு வகைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இதனால் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் தூத்துக்குடியில் தேக்கம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்தியாவில் இருந்து மீன் மற்றும் கருவாடு வகைகள் இறக்குமதி செய்வதைஇலங்கை தடை விதித்தள்ளது. மேலும் கருவாடுகளுக்கு மூன்று மடங்கு வரி விதித்துள்ளது.

ஆனால், இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து அதாவது மாலத்தீவு மற்றும் பாகிஸ்தானில் கராச்சி போன்ற பகுதியிலிருந்து கருவாடு இறக்குமதிக்கு அனுமதித்துள்ளது. இலங்கையின் இந்தக் கூடுதல் வரி விதிப்பு மற்றும் இறக்குமதி தடை போன்ற காரணத்தால் ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்லாமல் மீன்களைப் பிடித்து வருகின்ற மீனவ மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து மேலும் பேசியவர், “கருவாடு ஏற்றுமதியை ஊக்குவிக்க மானிய விலையில் குளிர்பதன கிடங்குகள் கட்டவும் உபகரணங்கள் வாங்கவும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் தற்போது தேக்கமடைந்துள்ள சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 15,000 டன் கருவாடுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share