பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு உதவி செய்ததாக கூறப்படும் ஐந்து ஆசிரியைகள் தலைமறைவாகியுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் மீது மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் வழக்கில் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருந்தனர். முதற்கட்டமாக மாணவிகளே நேரடியாக குற்றம்சாட்டிய ஐந்து ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று விசாரணைக்கு சம்மன் கொடுக்கச் சென்ற நிலையில் காயத்திரி, பிரவீனா உள்ளிட்ட ஐந்து ஆசிரியைகளும் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. பின்னர், கேளம்பாக்கம், பழனி கார்டனில் உள்ள 5 ஆசிரியைகளின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள ஆசிரியைகளை சிபிசிஐடி போலீசார் தேடிவருகின்றனர்.
**-வினிதா**
�,