தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி மற்றும் ஏடிஜிபியாகப் பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்பின் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏடிஜிபியாக இருந்த சுனில் குமாருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த சுனில்குமார் சிங், சிறைத் துறை டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சிறைத் துறை ஏடிஜிபியாக இருந்த ஆபாஷ் குமார், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவல் ஆணையராக உள்ள ஐஜி டேவிட்சன் தேவாசிர்வாதம், ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சென்னை காவலர்நல வாரியத்தின் ஐஜியாக இருந்த சேஷசாயி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.�,