பணமோசடி செய்ததாக ஜெ.தீபா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தீபாவின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமசந்திரன் என்பவர் ஜெ.தீபா தன்னிடம் பண மோசடி செய்ததாகப் புகார் அளித்தார். தான் தீபா பேரவையின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
அவர் கொடுத்த புகார் மனுவில், தீபாவும் அவரது கார் ஓட்டுநர் ராஜாவும், தன்னிடம் முதலில் 50 லட்சம் ரூபாயும் அதனைத் தொடர்ந்து 10 லட்சம் ரூபாயும் கடனாகப் பெற்றதாகக் தெரிவித்துள்ளார். பின்னர் கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் அமைச்சர் பதவி தருவதாகக் கூறித் தன்னிடம் அவர்கள் மொத்தமாக 1 கோடியே 12 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். பணத்தைத் திருப்பி கொடுக்கும்படி கோரியபோது தீபாவும் ராஜாவும் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அம்மனுவில் கூறியுள்ளார்.�,