3 வருடங்களில் மதுரை எய்ம்ஸ் : நீதிபதிகள் நம்பிக்கை!

public

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசு 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கும் என்று நம்புவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் அங்கு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள்.

மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற்றிருப்பார்கள்.

ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. அதனால், மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு மீண்டும் இன்று(ஆகஸ்ட் 17) விசாரணை நடந்தது. அப்போது, ”தமிழ்நாட்டோடு சேர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடிவடைகிற நிலையில் உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் கட்டுமான பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை.

மனுதாரர் ஒவ்வொரு நகர்வுக்கும் நீதிமன்றத்தை நாடியே உத்தரவு பெற்றுள்ளார். அதனால், நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திராமல், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்த ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 36 மாதங்களுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் நம்புகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *