}ஹரியானா: துஷ்யந்த் துவக்கிய ‘முதல்வர்’ பேரம்!

Published On:

| By Balaji

�.

90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளையும் வென்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. சுயேட்சைகள் 7, ஹரியானா லோகித் கட்சி 1, இந்திய தேசிய லோக் தள் 1 இடத்திலும் வென்றுள்ள நிலையில் சுயேட்சைகள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்களை எல்லாம் விட 10 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சௌதாலா மீதுதான் அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது.

ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது குறித்து உயர் தலைவர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தேவைப்படும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு 65 கோடி ரூபாய் வரை கேட்க கேட்க பாஜக தலைமை வாய் பிளந்துவிட்டது. மிகச் சிறிய மாநிலத்தில் மிகப்பெரிய தொகை கொடுத்து ஆட்சி அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

அதேநேரம் கிங் மேக்கராக உருவெடுத்துள்ள துஷ்யந்த் சௌதாலா, ‘என்னை முதல்வர் ஆக்குங்கள். கர்நாடகாவில் குறைந்த எண்ணிக்கையில் ஜெயித்த குமாரசாமியை காங்கிரஸ் முதல்வர் ஆக்கியதைப் போல என்னை முதல்வர் ஆக்குங்கள்” என்று பாஜக தரப்பிடம் ஒருபக்கம் பேசிக் கொண்டிருப்பதாகவும் டெல்லியில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share