தினம் ஒரு திருக்குறள்: வகுப்பறையாக மாறிய நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் தினமும் ஒரு திருக்குறளை கூறி அதன் விளக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கூடுதல் மாவட்ட நீதிபதி செம்மலின் மகனும், தமிழ் இலக்கிய வட்டத்துக்கு நன்கு தெரிந்த திரு.பழமலையை விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு ’திருக்குறள் முனுசாமி’ என்ற புத்தகத்தைப் பரிசளித்தார். அதைப் படித்ததும், நீதிபதி ஹரிபரந்தாமன், மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோர் திருக்குறளைப் பற்றிக் கூறியது எனது நினைவுக்கு வந்தது. தமிழர்கள் ஆகிய நாம் 51 திருக்குறளையாவது மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அது. அதன்படி இன்று நான்

’சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து’

என்ற திருக்குறளை மனப்பாடம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதில் ”இன்றிலிருந்து நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கும் ஒரு வழக்கறிஞரைத் தேர்வு செய்கிறேன், அதன் அடிப்படையில் தினமும் மதியம் அல்லது மாலை வேளையில் ஒரு திருக்குறளை கூறி, அதற்கான விளக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். முதல் நாளான இன்று வழக்கறிஞர் திருவடிக்குமார் திருக்குறளை ஒப்பித்து விளக்கம் கொடுத்தார்.�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts