lசரவெடி ஆல்பம்: தர்பார் மியூசிக் அப்டேட்!

Published On:

| By Balaji

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நிவேதா தாமஸ், யோகிபாபு, பேபி மானஸ்வி, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் ஒளிப்பதிவு செய்த இவர் இப்படத்தின் மூலம் 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தர்பார் மியூசிக் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அனிருத் பகிர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தில் கிட்டார், டிரம்ஸ் போன்ற இசை வாத்தியங்கள் இடம்பெற்று ‘கெட் ரெடி ஃபோக்ஸ், சரவெடி ஆல்பம் லோடிங்!’ போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. இதன் படி தர்பார் படத்தின் இசை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்த் இந்தப் படத்திற்கான டப்பிங்கில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.

தர்பார் திரைப்படம் 2020 பொங்கல் ரிலீசாக வெளியாகவிருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share