Rஅக்னிச் சிறகுகள் அக்‌ஷரா லுக்!

Published On:

| By Balaji

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடிக்கும் அக்னிச் சிறகுகள் திரைப்படத்தில் அக்‌ஷரா ஹாசனின் ‘கேரக்டர் இண்ட்ரோ’ போஸ்டர் வெளியாகியுள்ளது.

அம்மா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் பேனரில் டி.சிவா தயாரிக்கும் இந்தப்படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா மற்றும் ரஷ்யாவில் நடைபெற்றது.

அக்னிச் சிறகுகள் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கமல்ஹாசனால் வெளியிடப்பட்டது. நீண்ட காலமாக இப்படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், படத்தின் இயக்குநர் நவீன் கதாநாயகன் விஜய் ஆண்டனியின் கேரக்டர் இண்ட்ரோ போஸ்டரை நேற்று(நவம்பர் 20) வெளியிட்டிருந்தார். அந்தப் போஸ்டரில் நீளமான முடி, இறுக்கமான முகத்துடன் கைகளில் கிளவுஸ் மற்றும் ஜாக்கெட் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் விஜய் ஆண்டனி காணப்படுகிறார். இந்த படத்தில் அவர் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அக்‌ஷரா ஹாசனின் கேரக்டர் இண்ட்ரோ போஸ்டர் இன்று (நவம்பர் 21) வெளியிடப்பட்டுள்ளது. கைகளில் பொம்மை ஒன்றை வைத்துக் கொண்டு, குளிர் பிரதேசத்தில் பயன்படுத்தும் உடைகளை அணிந்து அப்பாவியான முக பாவனையுடன் அக்‌ஷரா தோற்றமளிக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அக்‌ஷரா ஹாசன் இந்த படத்தில் விஜி என்ற கதாபாத்திரத்தைக் கையாளவுள்ளார்.

ஹிப்பி லுக்கில் அக்‌ஷராவின் தோற்றம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share