விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் முதலாவது விண்வெளி நடைபயணத்தை கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோர் வெற்றிகரமாக செய்துள்ளனர். இதன் மூலம் நாசா விண்வெளிப்பயணத்தில் புதிய வரலாற்றை எழுதியிருக்கிறது.
பெண்கள் மட்டுமே பங்கேற்கும், விண்வெளி நடைபயண நிகழ்வுக்கு மார்ச் மாதத்தில் நாசா ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக கிறிஸ்டினா கோச், ஜெசிகா மீர் ஆகிய இரு விண்வெளி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் விண்வெளியில் பயன்படுத்தும் மின்கல ஆடை பற்றாக்குறையின் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு அச்சமயம் நடைபெறாமல் போனது.
இந்நிலையில், நேற்று(அக்டோபர் 18) இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களான ஜெசிகா மீர் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோர் [பெண்கள் மட்டுமே கொண்ட முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டு வரலாறு படைத்தனர்](https://www.edtr.ai/youe). கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் குவெஸ்ட் விமானத்தில் இருந்து நேற்று மதியம் வெளியே மிதந்தனர். தோல்வியுற்ற மின் கட்டுப்பாட்டு அலகை மாற்றுவதற்காக இந்தப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். விண்வெளி நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக விண்வெளியில் மிதந்து, பழுதடைந்த மின் கட்டுப்பாட்டு அலகை சரி செய்த நிகழ்வு அரைநூற்றாண்டில் முதன்முதலாக ஆண் துணையின்றி நிகழ்த்தப்பட்ட விண்வெளி நடையாகும் .
விண்வெளி வீரர்கள் மத்தியில் கூடுதல் வாகன செயல்பாடு (extra-vehicular activity ) என அழைக்கப்படும் இந்த விண்வெளிப் பயணம், அசல் திட்டமிடப்பட்ட தேதிக்கு, ஏழு மாதங்களுக்குப் பிறகு நடக்கின்றது.
இந்த விண்வெளிப் பயணத்திற்கு முன் கிறிஸ்டினா கோச், “நாங்கள் என்ன செய்கிறோம் என்பதன் வரலாற்று தன்மை காரணமாக இது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். கடந்த காலத்தில், பெண்கள் எப்போதும் முடிவெடுக்கும் இடத்தில் இருந்ததில்லை. அனைவருக்கும் சமமான பங்களிப்பு இருக்கும் போது, அனைத்து பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படும் சமயத்தில், இந்த விண்வெளி திட்டத்தில் பங்கெடுப்பது பெருமை. இது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆறரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த விண்வெளிப் பயணத்தின் வெற்றியை நாசா விஞ்ஞானிகள், தலைவர்கள் ஆகியோர் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோரை வெகுவாக பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
இதற்கு முன்னதாக, 14 பெண்கள் மற்றும் 213 ஆண்கள் விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். வரலாற்றில் முதல் விண்வெளி வீரராக ரஷ்ய விண்வெளி வீரர், வலண்டீனா தெரெசுக்கோவா கருதப்படுகிறார். 1963 ஜூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறார்.
�,”