hஸ்டாலின் சர்வாதிகாரியா?- கனிமொழி பதில்

Published On:

| By Balaji

நவம்பர் 10 ஆம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில், சர்வாதிகாரத்தைக் கையிலெடுக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்பி.யுமான கனிமொழி விளக்கம் அளித்திருக்கிறார்.

நேற்று நடந்த பொதுக்குழுவில் இடைத் தேர்தல் தோல்வி தொடர்பாகப் பேசிய ஸ்டாலின், “5,000, 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தோம் என்று சொன்னால் ஆளுங்கட்சி அமைச்சர்கள் பணம் கொடுத்தார்கள் என்று காரணம் சொல்லலாம். ஆனால், 40,000 வாக்குகள் வித்தியாசம் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தொண்டர்கள் விலகி நின்று விட்டார்கள். நான், தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம், ‘கட்சி நலனுக்காகச் சர்வாதிகாரத்தைக் கையிலெடுப்பேன்’ என்று குறிப்பிட்டேன். அதையே இப்போது மீண்டும் சொல்கிறேன். நிச்சயம் சர்வாதிகாரத்தைக் கையிலெடுப்பேன்” என்று பேசியிருந்தார்.

ஸ்டாலின் சர்வதிகாரம் பற்றிய பேச்சுக்கு திமுக நிர்வாகிகளிடையே நேற்றிலிருந்தே விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று (நவம்பர் 11) தூத்துக்குடிக்கு வந்த கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஸ்டாலின் சர்வாதிகாரத்தைக் கையிலெடுப்பேன் என்று பேசியது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. “திமுக தலைவர் பொதுக்குழுவில் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று சொன்னதன் அர்த்தம், கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக, தெளிவாக எடுக்க வேண்டும் என்பதற்காக கூறியிருக்கிறார். அதை அரசியல் காரணங்களுக்காக, புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு”என்று கூறினார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share