31 ஜேஎன்யூ மாணவர்களிடம் விசாரணை செய்யத் தயாராகிறது போலீஸ்!

public

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 9ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜேஎன்யூ மாணவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த கன்ஹையா குமார் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மரண தண்டனைக்கு எதிராகவும், பாராளுமன்றத்தாக்குதலில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாகவும் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் நாடுமுழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது.

அப்போது கன்ஹையா குமார் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மேல், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்காக தேசத்துரோக வழக்குப் பாய்ந்து, கைது செய்யப்பட்டார்கள்.

இப்பிரச்னையில் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக, டெல்லி போலீஸார் 31 ஜேஎன்யூ மாணவர்களை வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி வரை டெல்லியை விட்டு, எங்கும் செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இந்த விசாரணைக்காக தீவிரவாத ஒழிப்புக்கான, டெல்லி போலீஸார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரிடம் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் உதவி கேட்டுள்ளனர். அதன்படி, ஜேஎன்யூ மாணவர்களை விசாரிக்க இருக்கும் டெல்லி போலீஸாரின் விசாரணைக்காக பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 28 ஜேஎன்யூ மாணவர்களுடன், முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஷீலா ரஷீத்தும்,முன்னாள் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சட்ரூபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவின் மகளான அபரஜிதா ராஜாவும் டெல்லி போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இப்போராட்டம் குறித்து விசாரித்த ஐந்துபேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு கடந்தாண்டு மார்ச் 16ஆம் தேதி, ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அந்த ஆய்வறிக்கையில்,

கடந்த 2016,பிப்ரவரி 9ஆம் தேதி முகமூடி அணிந்த வெளிநபர்கள் சிலர் கூட்டத்தில் ‘ இந்தியா நசுக்கப்பட வேண்டும்’; ‘ பாகிஸ்தான் ஜிந்தாபாத்’, ‘ இந்தியா பாழாகும் வரை,இந்தப்போராட்டம் தொடரும்’ என குரல்கள் எழுப்பினர். ஆனால், அதற்கான வீடியோ ஆதாரங்கள் இல்லை” எனக்கூறியிருந்தார்கள்.

இருப்பினும் மாணவர்கள் என்பதால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் டெல்லி போலீஸார், அமைதி காத்தனர். இந்நிலையில் அப்போராட்டத்தின் போது இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக குரல் எழுப்பியவர்களை அறிந்து கொள்ள, 31 ஜேஎன்யூ மாணவர்களை மட்டும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர், டெல்லி போலீஸார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *