Uநாமக்கல் மாவட்டத்தில் போதுப்பட்டி பகுதியில் போஸ்டல் காலனியில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் அதன்கீழ் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது.
இந்த பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் அளவுக்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தநிலையில் சென்னை, நாமக்கல், கோவை என இப்பள்ளிக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் சோதனை மேற்கொண்டனர், இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் ரூ.150 கோடி கணக்கில் காட்டாததும், ஏராளமான அசையா சொத்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாமக்கல்லில் உள்ள பள்ளியின் நீட் பயிற்சி மையத்தில் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.30 கோடி அளவுக்குப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளியின் ஆடிட்டோரியத்தில் பணமும், அசையா சொத்துக்களின் ஆவணங்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
�,