`30 கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டிகள்!

public

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று (ஜனவரி 26) நடைபெற்றது. தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள வீரரும், நடப்பு சாம்பியனுமான சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர், கொரிய நாட்டின் வீரர் இளம் வீரர் சூங் ஹையோனுடன் மோதினார். முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய ஃபெடரர், இரண்டாவது செட்டிலும் 5-2 என முன்னிலை வகித்தார். சூங் ஹையோன் காலில் ஏற்பட்ட காயங்களால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை எனவே போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். எனவே ஃபெடரர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இது அவர் விளையாடவிருக்கும் 30ஆவது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியாகும். இதுவரை 29 கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஃபெடரர் 19 முறை கோப்பையைக் கைப்பற்றி, அதிக முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை 6 முறை ஆஸ்திரேலிய ஓப்பனின் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள ஃபெடரர் 5 முறை வெற்றி கண்டுள்ளார்.

இந்த முறை நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருக்கும் வீரர் மாறின சிலிச் உடன் மோத உள்ளார். ஃபெடரர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0