ஓவியா கதாநாயகியாக நடித்த ‘ஓவியாவை விட்டா யாரு’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
களவாணி, கலகலப்பு போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதன் சீஸன் மூலம் பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 90 எம்.எல் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், அடுத்து வந்த காஞ்சனா 3 இந்த வருடத்தின் முக்கியமான வெற்றிப் படமாக மாறியது.
ஓவியா பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் சீனி என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர், அந்நிகழ்ச்சியின் மூலம் ஓவியா அடைந்த பிரபலத்தை மனதில் கொண்டு அப்படத்தின் பெயரை ‘ஓவியாவை விட்டா யாரு’ என படக்குழுவினர் மாற்றி விட்டனர்.
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் மே 24ஆம் தேதி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே தேதியில் தான் ஜெய், ராய் லஷ்மி, வரலஷ்மி சரத்குமார், கேதரின் ஆகியோர் நடித்த நீயா 2 திரைப்படமும் வெளியாகவிருக்கிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
.
�,”