ஒரு கப் காபி
இன்று நாம் அனைவரும் எவ்வாறு உணவை உண்கிறோம்? தட்டுக்கு உணவு வரும் முன் இரண்டு அலைபேசி அழைப்புகள். சாப்பிடத் தொடங்கிய பின் நான்கு அலைபேசி அழைப்புகள். நடுவே ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டகிராம் பார்க்கும் அத்தியாவசியமான கடமை. செல்போனை எடுக்காவிட்டாலும் ஏதோவொரு பரபரப்பு, உறவுச் சிக்கல்கள், வேலை பற்றிய பதற்றம், பொறுப்புகள் என மனம் எண்ணங்களால் ஒரு சிலந்தி வலையைக் கட்டமைத்துச் சிக்கவைக்கும். கடமைக்குச் சாப்பிட்டுவிட்டுப் பரபரப்பைத் தொடர்வோம்.
உணவில் கவனம் செலுத்திச் சாப்பிடுபவர்கள் அரிதிலும் அரிதானவர்கள். விலங்குகளோ, மற்ற உயிரினங்களோ இந்தப் பிழையைச் செய்வதில்லை. விலங்குகளுக்கு உணவு என்பதே கொண்டாட்டம்தான். தற்போதைய தருணத்தை, வாழ்வை, தனது இருப்பைக் கொண்டாடும் வகையில் விலங்குகள் பேரின்பக் களிப்புடன் புசிக்கின்றன. மனிதர்கள் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இடையே தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். உணவை முன்னிட்டு அந்தச் சுய பரிசோதனை அமையும்போது நம்மைப் பற்றிய பல விஷயங்களை நாம் உணர முடியும்.
மனதின் பரபரப்பை ஒழித்து உணவை உணர்ந்து, ரசித்து, மெல்லக் கொண்டாட வேண்டும். ஒருவரது சொந்த வாழ்வில் எல்லாமுமே கொண்டாடத்தக்க வகையில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சமாக உணவையாவது கொண்டாடுவதே அவ்வாழ்வுக்கு அவர்கள் செய்யும் நீதி.
**- அ.விக்னேஷ்**
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”