தினப் பெட்டகம் – 10 (03.09.2018)
சருமம்/தோல் என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயம் என்ன? பலருக்கும் முகம்தான் முதலில் வரும்; சிலருக்கு விளம்பரங்கள், படங்களில் காண்பிப்பது போல வெண்ணிறமான சருமம் நினைவுக்கு வரும். பதின்பருவத்தினருக்கு முகம், அதில் வரும் பரு போன்ற பிரச்சினைகள் நினைவுக்கு வரும். ஆனால், இவையனைத்தையும் தாண்டி, நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு தோல். அந்த தோல் பற்றி:
1. நம் உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல். ஏறத்தாழ நம் உடலில் 1.73 சதுரமீட்டரில் இருந்து 18.5 சதுரமீட்டர் வரை தோல்தான் எலும்புகளையும் தசைகளையும் மூடியிருக்கின்றன.
2. நம் உடல் எடையில் 16% தோலின் எடை.
3. நம் தோலில் முக்கியமான நான்கு receptorகள் உள்ளன: Meissner’s Corpuscles, Merkel’s discs, Ruffini endings மற்றும் Pacinian Corpuscles. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது.
4. Meissner’s Corpuscles: மிருதுவான தொடுதலை உணரும் (light touch); Merkel’s discs அழுத்தம் மற்றும் தொடும் பொருளின் தன்மையை (texture) உணரும்;, Ruffini endings: stretchesஐ உணரும்; Pacinian Corpuscles அதிர்வையும் மிகவும் அதிகமான ஆழமான அழுத்தத்தையும் உணரக்கூடியது. இவை அல்லாமல் பல நரம்புகள் உள்ளன, வெப்பநிலையை உணர்தலுக்கும் இன்னபிற வேலைகளுக்கும்.
5. நம் உடலில் தோல் ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒரு முறையும் மாறிக்கொண்டே இருக்கிறது.
6. நம் உடலிலுள்ள பழைய தோல், dead cellsஆக உதிர்ந்துகொண்டே இருக்கக் கூடியது. ஒவ்வொரு நொடியும், நம் தோல் சராசரியாக 50,000 செல்களை உதிர்த்துக்கொண்டே இருக்கும்.
7. நம் தோல் 11 மைல்களை விடவும் நீளமான நரம்புகளை உள்ளடக்கியது.
8. நம் உடலில் இருக்கும் மிகவும் லேசான (thinnest skin) தோல் கண்களில் இருக்கிறது: 0.2mm.
9. நம் உடலில் இருக்கும் மிகவும் தடிமனான (thickest skin) தோல் பாதங்களில் இருக்கிறது: 1.4mm.
10. நம் தோலில் 1000 அதிகமான பாக்டீரியா வகைகள் வாழ்கின்றன. ஏறத்தாழ 1,000,000,000,000 பாக்டீரியாக்கள்!
**- ஆஸிஃபா**�,”