3கிரேஸி மோகன் மறைவு!

Published On:

| By Balaji

நடிகரும், கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று மதியம் 2 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67.

கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று (ஜூன் 10) காலை 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் 2 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர். இவர் 1979ஆம் ஆண்டு தனது கிரேஸி கிரியேஷன் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். கே.பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெற்றியடைந்த பெரும்பாலான காமெடிப் படங்களின் பின்னணியில் கிரேஸி மோகன் பணியாற்றியுள்ளார். சதிலீலாவதி, காதலா காதலா, அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி, பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களின் திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் பணியாற்றியதோடு நடிக்கவும் செய்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share