3உளுந்து விலை சரிவு!

Published On:

| By Balaji

வரத்து அதிகரிப்பால் உளுந்து விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.1000 வரை சரிந்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உளுந்து உற்பத்தி சிறப்பாகச் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களில் இந்தப் பருவத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்ததால் உளுந்து உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் உளுந்து வரத்து அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதத்தில் உளுந்து வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் முதல் ரக உளுந்து 100 கிலோ ரூ.9500க்குக் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்தில் அதன் விலை ரூ.1000 சரிந்து ரு.8,500ஆகக் குறைந்துள்ளது.

வெளி மாநில வர்த்தகர்களிடமிருந்து குறைவான விலைக்கு உளுந்து கிடைப்பதால், தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்பத்திக்கும் விலை குறைந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel