‘கமலுடன் இணையும் ரஜினி’ன்னு போஸ்டர் நியூஸ பாத்து ஒரு நிமிஷம் பக்குன்னு ஆச்சு. இவரு கட்சில அவரு போனாரா? இல்ல அவரு கட்சில இவரு போறாரா? இல்ல ஒண்ணா படம் ஏதும் நடிக்கப் போறாங்களான்னு ஒரே டவுட்டு. அத உடனே தீத்துக்கணும்னு அந்த கொட்டுற மழைலயும் ஃபோன எடுத்து கஷ்டப்பட்டு நியூஸ பாத்தா கமல் சாருக்கு பர்த்டேவாம். அந்த ஃபங்ஷனுக்கு ரஜினி சார் போறாராம். கொஞ்ச நேரத்தில சந்தேகப் பட வச்சிட்டாங்கடான்னு என்னோட ஆதங்கத்த பக்கத்தில இருக்கிற என் ஃப்ரண்டு கிட்ட கொட்டிகிட்டேன். அவன் என்னடான்னா அத பத்தி கவலையே படாம ‘முதல் முதலா பொறந்த டெஸ்ட் டியூப் பேபி யாரு குமாரு’ன்னு என்கிட்ட கேக்குறான். ஒரு சந்தேகத்திலயே தெரியாதுடான்னு சொன்னேன். ‘அது ராமரோட சீதையாம்டா, உத்திர பிரதேச துணை முதலமைச்சரே சொல்லி இருக்காருடா. துணை முதல்வர்னாலே துணிச்சல் தான் இல்லே’ன்னு கேக்குறான். எப்போவும் மாதிரி அது சந்தேகமா கலாய்யான்னு தெரியாம இதுக்கு எல்லாம் கருத்து சொல்ல முடியாதுன்னு கிளம்பி வந்திட்டேன். நீங்க அப்டேட்ட படிங்க.
**கருப்பு மன்னன்**
மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய சீமான்
இவரே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லுவாராம் இவரே சினிமாவில் நடிப்பாராம்
**ச ப் பா ணி**
ஆசிரியர் பணிமாறுதலில் வேறு பள்ளிக்குச் செல்வதுதான் மாணவனுக்கு உண்மையான குருபெயர்ச்சி பலன்
நான் கோவமா இருக்கேன் ????pic.twitter.com/9SUrcUA1rJ
— ????எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) October 31, 2019
**பாட்டி வைத்தியம்**
முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.
**எனக்கொரு டவுட்டு**
தேடி வந்து பேசுற மாதிரி நட்பு சம்பாதிக்கணும்னா ஊர்ல எல்லார்ட்டையும் கடன்தான் வாங்கி வைக்கணும்..
Haha ???? karma pic.twitter.com/Lh6k7uRGa3
— CCTV IDIOTS (@cctvidiots) October 30, 2019
**ச ப் பா ணி**
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் 2 மாணவர்களுக்கு, ஜாமின்
மாணவர்களின் தந்தை இருவருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு.
-மகன் தந்தைக்காற்றும் உதவி..
**சவேதி**
சேர்த்து
வைத்திருக்கிறேன்
மழை விட்டபின்னும்
மரங்களில் இருக்கும்
“மழைத்துளி”களைபோல
நினைத்த போதெல்லாம்
“சிலிர்த்து”க்கொள்ள …
-நினைவுகள்
Love at First Sight pic.twitter.com/9kTgTW7njV
— Awwwww (@AwwwwCats) October 30, 2019
**Dr.மூர்த்தி**
125 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் வெளியிட்டார்: செய்தி
அப்படியே 101- ரூபாய் நாணயத்தையும் வெளியிட்டு இருந்தால் ஸ்டெயிட்டா தட்சணை தட்டில் வைக்க வசதியா இருந்திருக்கும் !!
**விடியலைதேடி**
தண்ணீரும் அன்பும் ஒன்றுதான்,
அது கொஞ்சமேனும் இல்லாமல் இருந்தாலும் வாழ முடியாது,,
அது அளவுக்கு அதிகமாக இருந்தாலும் வாழ விடாது.
தனது நாய் நன்றியுள்ளதா என்று பரிசோதித்து பார்த்த எஜமான் ..
இறுதியில் வென்றது யார் ?? pic.twitter.com/Q5bFwdSilv
— சக மனிதன் (@commonmantalks) October 31, 2019
**ஜோக்கர்**
“தொலைத்து விடுவதை” விட கொடுமையானது,
“தொலைந்து விடுமோ” என்றே இறுகப்பற்றிக்கொண்டு சகலரயும் அந்நியனாய் அணுகிடும் அச்சஉணர்வே..!!!
**mugavai abbas**
மதுவும் ஆள்துளைக் கிணறும் ஒன்று.
முதலில் விழும்போது 25 அடியில் இருப்போம். அப்புறம் எத்தனை அடி ஆழம் போவோம்னு நமக்கே தெரியாது
-லாக் ஆஃப்
�,”