சர்வர் கோளாறு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!

Published On:

| By admin

சர்வர் கோளாறு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தற்போது தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி (நேற்று) வரை விண்ணப்பிக்கலாம் என்று பணியாளர் தேர்வு வாரியம் என தெரிவித்து இருந்தது.
அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க நேற்று (ஏப்ரல் 7) கடைசி நாள் என்பதால், அதிகமானோர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் சரிவர இயங்காத காரணத்தால், பெரும்பாலானவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
இதையடுத்து சர்வர் கோளாறு காரணமாக, விண்ணப்பிப்பவர்களுக்குக் கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 17ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

– ராஜ்-

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share