|துபாய் டூ சென்னை: அதிகரிக்கும் தங்கம் கடத்தல்!

public

சென்னை விமான நிலையத்தில், ரூ 39.82 லட்சம் மதிப்பிலான 867 கிராம் தங்கம் சுங்கத்துறையால்  இன்று (மார்ச் 9) பறிமுதல்  செய்யப்பட்டது.

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்திறங்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த பிஸ்மில்லா கான்(21) மற்றும் தென்காசியைச் சேர்ந்த  ஹெப்சி பியூலா கார்த்தீசன்(30) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  அவர்களைச் சோதனை செய்ததில், அவர்களது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பொட்டலங்களில் 867 கிராம் எடையுடைய தங்கப் பசை கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 39.82 லட்சம்  என சுங்கத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 8ஆம் தேதி, ரூ 65.2 லட்சம் மதிப்பிலான 1.41 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.  இதுதொடர்பாக, ஃபிளை துபாய் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹாஜாமைதீன் 28) மற்றும் சென்னையைச் சேர்ந்த புஷ்பராஜ், (28), எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் அலி(43) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 7ஆம் தேதி, துபாயிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுங்கத்துறை தீவிர சோதனை நடத்தியது. இதில், ரூ. 35.7 லட்சம் மதிப்பில் 730 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரையைச் சேர்ந்த யாசர் அராபத் (22) என்ற பயணி விசாரணை வளையத்தில் உள்ளார்.

கடந்த மார்ச் 5ஆம் தேதி, துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஈகே-544 என்ற விமானத்தில் சென்னை வந்த திருச்சியைச் சேர்ந்த ஜாஹிர் ஹுசைன் (49), அஜித் அகமத் (26), சென்னையைச் சேர்ந்த நைனா முஹம்மத் (41) ஆகிய மூவரிடம், ரூ. 1.53 கோடி மதிப்பில் 3.27 கிலோ தங்கம் செய்யப்பட்டது.  

இதுபோன்று, துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவது   சமீப காலமாக  அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *