yநீண்ட நேரப்பயணத்திற்கான விமானசேவை துவக்கம்!

Published On:

| By Balaji

உலகிலேயே முதன்முறையாக 20 மணி நேரத்திற்கும் மேலாக அதிக நேரம் வானில் பறக்கக்கூடிய விமான சேவை இன்று(அக்டோபர் 18) முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

விமானப்பயணம் என்பது இன்றுவரைப் பலருக்கும் ஒரு கனவாகவே உள்ளது. ஒரு நாட்டிலிருந்து உலகின் எந்த மூலை வரைப் பறந்து செல்வதற்கும், கண்டம் விட்டு கண்டம் பறக்கவும் விமானங்கள் பெருமளவு உதவி புரிகின்றன. நாளுக்கு நாள் அதன் தேவையும் அதிகமாகி வருகிறது.

இதன் காரணமாக விமான சேவையிலும் பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வந்தது. அந்த முயற்சிகளின் வெற்றியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குவாண்டஸ் நிறுவனம் அதிக தூரம் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து 20 மணி நேரங்களுக்கும் மேலாகப் பயணம் செய்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, ஐம்பது பயணிகளுடன் தொடர்ந்து பறக்கவுள்ளது.

இன்று(அக்டோபர் 18) இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 20) சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பயணிகளுக்குத் தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

விமானத்துறையில் புதிய வரலாற்றைப் படைக்கும் இந்த முயற்சியில் பயணிகள் மற்றும் விமானிகளின் உடல்நலனைக் கண்காணிக்கும் பொருட்டு பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான பயண அனுபவத்தை ஏற்படுத்தி வழங்குவதற்கு குவாண்டாஸ் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share