பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார்.
இந்தியாவில் பேறுகால இறப்புகள் குறைந்தது தொடர்பாக வெளியான செய்தியை பகிர்ந்து இன்று (ஜூலை 17) தனது கருத்துக்களை முன்வைத்தார் ஜெயரஞ்சன். 2014-16 காலகட்டத்தில் ஒரு லட்சம் தாய்மார்களுக்கு 130 பேறு கால இறப்புகள் பதிவாகியிருந்தன. அது தற்போது 113 ஆக குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கான குறியீடு என்றார். எந்த வகையில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது என்ற விளக்கத்தையும் அளித்தார்.
பேறு கால இறப்பு குறைந்தது எப்படி என்றும், அதன் கணக்கீட்டு முறைகள் குறித்தும் ஜெயரஞ்சன் விரிவாகக் குறிப்பிட்டார். பேறு கால இறப்புகளை குறைக்க எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் பற்றியும் பேசினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”