வரி வருவாயிலும் மந்தநிலை: கார்பரேட் வரிக்குறைப்பு காரணமா?

public

மந்தநிலையின் பாதிப்பால் வரி வருவாய் எனப்படும் ‘டாக்ஸ் ரெவன்யூ’ கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளது.

பொருளாதார மந்தநிலை, ஜிஎஸ்டி, குறுகிய வரி அடிப்படை மற்றும் குறைந்த வரி மிதப்பு(low tax buoyancy) காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வரி வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது.

வரி வருவாய் என்பது வரிவிதிப்பு மூலம் அரசாங்கங்கள் பெறும் வருமானமாகும். வரிவிதிப்பு என்பது ஒரு தேசம்/மாநிலத்தின் முதன்மை வருமான ஆதாரமாகும். தனிநபர்கள், பொது நிறுவனங்கள், வர்த்தகம் போன்ற மூலங்களிலிருந்து வருவாய் பெறப்படலாம்.

வரி வசூல் வளர்ச்சி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு கணிசமாக குறைந்துள்ளது. சென்றாண்டில் 11.7 சதவீதமாக மொத்த மத்திய வரிகள் வளர்ச்சி, நடப்பு காலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளன என்று கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் – சிஜிஏ(Controller General of Accounts – CGA) தரவு காட்டுகிறது. நேரடி வரி வருவாய் வளர்ச்சி 6.7 சதவீதம் முதல் 5.8 சதவீதம் வரை குறைந்தது. மறைமுக வரி வருவாய் வளர்ச்சியும் 16.1 சதவீதம் முதல் 7.3 சதவீதமாக வரை குறைந்துள்ளது.

அதே நேரத்தில், வருமான வரி வருவாய் 11.3 சதவீதம் முதல் 6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த போக்கை முறியடித்து, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், பெருநிறுவன வரி வருவாய் 5.5 சதவீதமாய் வளர்ச்சியடைந்துள்ளது. சென்ற நிதியாண்டில் 0.6 சதவீதமாக இருந்தது பெரு நிறுவன வருவாய்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. இதையடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்தது. செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி, செஸ் மற்றும் கூடுதல் வரி உள்ளிட்டவற்றை 22 சதவீதமாகக் குறைத்து மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.

செப்டம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்ட வரிக் குறைப்பினால் வருவாய் வசூலில் ஏற்பட்ட உடனடி தாக்கம், ஆண்டு முழுவதும் எதிரொலிக்கும். கார்ப்பரேட் வரி குறைப்பு நிதியாண்டில் 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும் என்று அரசாங்கம் முன்னரே மதிப்பிட்டுள்ளது.

**வரி அல்லாத வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியுமா?**

ஏப்ரல்-ஜூலை மாதங்களில் வரி அல்லாத வருவாய் பட்ஜெட் செய்யப்பட்ட இலக்கில் 14 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய மூலதன இருப்புக்களின் போதுமான அளவை மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட பிமல் ஜலான் கமிட்டி, நடப்பு நிதியாண்டில், 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியில் இருந்து அரசாங்கத்திற்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளது. இந்த தொகையில் சுமார் 90,000 கோடி நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளின் ஒரு பகுதியாகும். மீதமுள்ள 50,000 கோடி பற்றாக்குறையை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என பிமல் ஜலான் கமிட்டி கணக்கிட்டுள்ளது.

ஏப்ரல்-ஜூலை மாதங்களில் மத்திய அரசின் மூலதன செலவு (கேபெக்ஸ்) 3.4 சதவீதமாக சுருங்கியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கேபெக்ஸ் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மொத்த முதலீட்டில் அரசாங்கத்தின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. வருவாய் செலவின வளர்ச்சி 7.9 சதவீதம் ஆக குறைந்தது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.3 சதவீதம் வரவு செலவுத் திட்டத்தில் வருவாய் பற்றாக்குறையை அரசாங்க செலவினங்களுக்கு சிறிய நிதி இடத்தை விட்டுள்ளது.

கார்ப்பரேட் வரிக் குறைப்பு, வரி வசூல் பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும் என்பதால், நிதி பற்றாக்குறையை அடைக்க கூடுதல் கடன் மற்றும் வரி அல்லாத வருவாய்களை நம்பியிருப்பது மட்டுமே தற்போதைய வழி என்றும் அது குறித்து முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டும் வருகின்றன.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *