Xபணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

Published On:

| By Balaji

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில், நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று கட்டுக்கு அடங்காமல் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சமீபத்தில் ‘Break the Chain’ என்ற பரப்புரையை மாநில அரசு முன்னெடுத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாசிக் நகரில் உள்ள நாணய பாதுகாப்பு அச்சகம் மற்றும் இந்தியா பாதுகாப்பு அச்சகத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அச்சகங்களிலும், தீயணைப்பு படை, நீர் வழங்கல் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற அவசர சேவைகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே செயல்படுவார்கள். ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி நடைபெறாது.

இருநிறுவனங்களிலும் பணியாற்றும் 3 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள பணத்தில் சுமார் 40 சதவீதம் நாசிக் நகரில் அச்சிடப்பட்டவை. கடந்தாண்டும் கொரோனா காரணமாக சிறிது நாட்கள் பணம் அச்சடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share