திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தனியார் விற்பனை செய்த தரமற்ற நெல் விதைகளால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில் நெல் முக்கிய சாகுபடியாக உள்ளது.ஆண்டுதோறும் சம்பா, குருவை என இரண்டு பருவங்களில் 6,000 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்படுகிறது. இதனால் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் பல தனியார் விதை பண்ணைகள் உ ள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள் கடைகளில் வைத்து விற்கப்படுகிறது. இந்த விதை விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் சென்று, தங்கள் விதைகளை வாங்கி விதைத்தால் மகசூல் அதிகரிக்கும் என உறுதி கொடுக்கின்றனர். இதை நம்பும் விசாயிகள் தனியார் கடைகளில் விதைகளை வாங்கி ந டவு செய்தனர். கடந்த சம்பா பருவத்தில் இதுபோல் நடவு செய்தவை தரமற்ற விதைகளாக உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “ஒரு ஏக்கர் பரப்பு நடவு செய்ய 60 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை நெல் தேவைப்படுகிறது. கனியூரிலுள்ள தனியார் விதை விற்பனையாளரிடம் ஒரு மூட்டை 4,000 ரூபாய் விலையில் 25,000 ரூபாய்க்கு விதை நெல் வாங்கி வேடபட்டியில் பல ஏக்கர் நடவு செய்தோம். இது தவிர நாற்றங்கால் தொடங்கி அறுவடை வரை ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரை செலவாகிறது.
வழக்கமாக ஒரு ஏக்கர் பரப்பிற்கு 60 மூட்டைகள் வரை அதாவது 3,600 கிலோ நெல் மகசூல் கிடைக்கும். ஆனால், தனியார் விற்பனை செய்த தரமற்ற நெல் விதைகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டு இந்த அறுவடையி ல் 10 மூட்டைகள் அதாவது 600 கிலோ வரைதான் மகசூல் கிடைத்துள்ளது. பயிர்கள் மட்டும் வளர்ந்துள்ளன. அதில் நெல்மணிகள் இல்லை. இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மடத்துக்குளம் தாலுகாவின் பல இடங்களிலும் இதுபோல தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த விற்பனைக்கு பில் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் வழங்கப்படுவதும் இல்லை. சம்பந்தப்பட் ட துறையினர் தரமற்ற நெல் விதைகளை விற்றவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனி இது போல் விவசாயிகள் பாதிக்கக் கூடாது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
**-ராஜ்**
.