wமருத்துவர் வீட்டில் 280 பவுன் நகை, பணம் கொள்ளை!

public

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் வீட்டிலுள்ளவர்களை கட்டிப்போட்டு, 280 சவரன் நகைகள், ரூ. 25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராக இருந்து வரும் சக்திவேல், தன்னுடைய மனைவி, அப்பா, அம்மாவுடன் தனது மருத்துவமனைக்கு அருகில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மூகமுடி கொள்ளையர்கள் மருத்துவர் சக்திவேல் உள்பட நான்கு பேரையும் கட்டிப்போட்டு விட்டு, பீரோவில் இருந்த 280 சவரன் நகை, ரூ.25 லட்சம் பணம் மற்றும் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த இன்னோவா கார் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சக்திவேல் போலீசில் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எஸ்பி சீனிவாசன் மற்றும் டிஐஜி ரூபேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கொள்ளை போன வீட்டில் மோப்ப நாய், கைரேகை வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையர்களை கண்டுபிடிக்க இரண்டு ஏடிஎஸ்பி தலைமையில் 13 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.