இந்தியாவில் தற்போது பரவலாக அறியப்படும் பல ராக்பேண்டுகள் உருவாக அடித்தளமாக அமைந்த இண்டிபெண்டன்ஸ் ராக் திருவிழா 27 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது சென்னையில் நடைபெறவுள்ளது. Indus Creed மற்றும் Parikrama போன்ற புகழ்பெற்ற ராக் பேண்டுகளை உருவாக்கிய இண்டிபெண்டன்ஸ் ராக், இந்தியா முழுவதும் உள்ள ராக் பேண்டுகளுக்கு மேடை அமைத்துக்கொடுத்து அதில் 5 ராக் பேண்டுகளை இறுதிப் போட்டிக்குத் தேர்வுசெய்து வெற்றிபெற்ற ராக் பேண்டுக்கு பணப்பரிசு மற்றும் ஆல்பம் வெளியிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
தென்னிந்தியாவில் பெங்களூரு வரை மட்டுமே இதுவரை வந்துசென்ற இண்டிபெண்டன்ஸ் ராக் குழுவினர் தற்போது சென்னைக்கு வருவதால் இங்கிருக்கும் இளம் திறமையாளர்கள் பலர் அடையாளம் கானப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ‘ஐ ராக்’ எனப்படும் இந்தக் குழுவினருடன் இணைந்துள்ள சென்னையைச் சேர்ந்த Fourth Dimension Media Solutions குழுமத்தின் சி.இ.ஓ.ஷங்கர். கடந்த இரு வாரத்தில் மட்டும் 1500 பேர் இதில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், சென்னை தவிர்த்து திருச்சி, கோவை போன்ற பகுதிகளிலும் இருந்து பலர் இதற்காக விண்ணப்பித்துள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.�,