[ஒமிக்ரானால் எத்தனை பேர் பாதிப்பு?

public

இந்தியாவில் இதுவரை 25 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று(டிசம்பர் 10) செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்,”நாட்டில் இதுவரை மொத்தம் 25 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அனைவருக்குமே லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. ராஜஸ்தானில் ஒன்பது பேர், குஜராத்தில் மூன்று பேர், மகாராஷ்டிராவில் பத்து பேர், கர்நாடகாவில் இரண்டு பேர், டெல்லியில் ஒருவர் என மொத்தம் 25 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதுடன், பொது சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதார நடவடிக்கைகளில் மெத்தனமாக இருந்ததால்தான் ஐரோப்பாவில் தொற்று அதிகரித்துள்ளது.

இதுவரை 59 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது. இந்த நாடுகளில் மொத்தம் 2,936 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, 78,054 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்தல் மற்றும் சோதனைகளை அதிகபடுத்த ஏற்கனவே மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

கடந்த வாரத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு விகிதம் 0.73 சதவீதமாக இருந்தது. கடந்த 14 நாட்களில் 10,000க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 43 சதவிகிதமும், மகாராஷ்டிராவில் 10 சதவிகிதமும் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் இன்னும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா,” ஒமிக்ரான் தொற்றினால் உலகளாவிய சூழ்நிலையையும், இந்தியாவில் கொரோனா பாதிப்பையும் கண்காணிக்க தினந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஐந்து சதவிகிதத்துக்கு மேல் பாதிப்பு இருக்கும் இடங்களில்மாவட்ட அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நாளொன்றுக்கு 80 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்தியாவில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்வரை இந்த நடவடிக்கை தொடர வேண்டும். மேலும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *