[24 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

public

ஐபிஎஸ் அதிகாரிகளின் மாற்றத்தைத் தொடர்ந்து, 24 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நேற்று காலை சிறைத்துறை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆவின் நிறுவனத்தில் இணை இயக்குநராக இருந்த சீதாலட்சுமி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்வோர் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராக இருந்த வெங்கடபிரியா பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் சிவராசு வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்.

தமிழ்நாடு சுகாதார சேவை நிறுவனத்தின் பொது மேலாளர் உமா மகேஸ்வரி, சுகாதார முறை திட்ட இயக்குநரானார்.

வணிகவரித்துறை இணை ஆணையர் அம்ரித் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளர் கவிதா ராமு, அருங்காட்சியக இயக்குநராக நியமனம்.

எல்காட் பொது மேலாளர் அன்பழகன், ஆவணக்காப்பக இயக்குநராக நியமனம்.

சேகோசர்வ் மேலாண் இயக்குநராக கஜலட்சுமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தாட்கோ மேலாண் இயக்குநராக என்.சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு பயிற்சி நிர்வாக இயக்குநராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டார்.

முதலமைச்சர் அலுவலக துணை செயலாளராக இருந்த பொன்ராஜ் ஆலிவர், மறுவாழ்வு துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் ஆணையர் ராஜாராமன், மருத்துவச் சேவை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.