<உலகக் கோப்பை யாருக்கு?

Published On:

| By Balaji

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளில் தங்களது முதல் உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது இன்றைய மோதலில் தெரிந்துவிடும். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று (ஜூலை 14) நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் நியூசிலாந்து அணியும் இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரையில் உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற தாகம் இந்த ஆண்டுத் தொடரில் நன்றாகவே தெரிந்தது. லீக் சுற்றுப் போட்டிகளில் 7 வெற்றிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருக்க, 6 வெற்றிகளுடன் இங்கிலாந்து மூன்றாம் இடத்தையும், 5 வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி நான்காம் இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இங்கிலாந்து அணி பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதோடு, சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். அங்குள்ள மைதானத்தின் சூழல், வானிலை போன்ற காரணிகள் குறித்து நன்கு பரீட்சயமான இங்கிலாந்து இன்றைய போட்டியை தன்னம்பிகையுடன் எதிர்நோக்கியுள்ளது. நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய பலம் இல்லாவிட்டாலும் போட்டியில் சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு உள்ளது. வில்லியம்சனின் பொறுமையான அணுகுமுறை அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

மைதானத்தைப் பொறுத்தவரையில், மழை வரும் சூழல் இருப்பதால் இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி போல ஆட்டத்தின் போக்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ரன் 334 ரன்களாகும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து இந்த ரன்னைக் குவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா எடுத்த 107 ரன்கள்தான் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ரன்னாகும். வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன் 326. இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா இந்த இலக்கை சேஸ் செய்துள்ளது. இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கினால் 300 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரையில் 90 முறை மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து 43 முறையும் இங்கிலாந்து 41 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை. உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி 5 முறையும் இங்கிலாந்து அணி 4 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லுமா அல்லது இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்து நியூசிலாந்து கோப்பையைத் தட்டிச் செல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share