Uதீபாவளியை நம்பும் கார் கம்பெனி!

Published On:

| By Balaji

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மொத்த விற்பனையில் 21 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 2018 செப்டம்பரில் 55,022 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 43,343 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த செப்டம்பரில் 51,268ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பரில் 40,692 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கார்கள் மற்றும் வேன்கள் அடங்கிய பயணிகள் வாகனப் பிரிவில், இந்நிறுவனம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 21,411 வாகனங்களை விற்பனை செய்த நிலையில் இந்த ஆண்டு 14,333 வாகனங்களை மட்டுமே விற்றிருக்கிறது. இதனால் 33 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது, வணிக வாகன பிரிவில், இந்த ஆண்டு 18,872 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் வாகனங்களின் விற்பனை 22,917 ஆக இருந்ததுள்ளது. அதன்படி வணிக ரீதியான வாகன விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 18 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

ஏற்றுமதியைப் பொறுத்தவரை இந்நிறுவனத்துக்கு 29சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 3,754 வாகனங்கள் ஏற்றுமதியான நிலையில் 2019 செப்டம்பரில் 2,651 ஆக ஏற்றுமதி சரிந்துள்ளது.

வீழ்ச்சி குறித்து மஹிந்திரா விற்பனைப் பிரிவுத் தலைவர் வீஜே ராம் நக்ரா, இது ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இருக்கலாம். நவராத்திரி, தீபாவளி என விழாக்கால சலுகைகள் விற்பனையை அதிகரிக்கும் என நம்புகிறோம். அரசின் சமீபத்திய அறிவிப்புகளும் விற்பனையை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share