கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

public

கிராமங்களில் மழை பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அதை சிலர் மூடநம்பிக்கை என்பார்கள்; சிலர் உண்மை என்பார்கள். அதேபோல தற்போது கர்நாடகத்தில் ஒரு கிராமத்தில் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்த சில மணி நேரத்தில் மழை வந்ததால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல பாதிப்புகளை சந்தித்தது. தொடர்ந்து கர்நாடகத்தில் பல பகுதிகளில் கன மழை சில சேதங்களை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களாக வட கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள விஜயநகர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாமல் இருந்து வந்தது. சுற்றி எல்லா புறமும் தென்மேற்கு பருவமழை பெய்து கொண்டிருக்கும்போது தங்கள் பகுதியில் மட்டும் மழை இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் விஜயநகர் மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா கோனகேரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மழை வருவதற்காக, அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இரண்டு கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்தத் திருமணத்துக்காக இரண்டு கழுதைகளுக்கும் மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.
திருமணத்துக்கு பின் அந்த இரண்டு கழுதைகளையும் அந்தக் கிராமத்தில் மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அந்த ஊர்வலம் நடந்து கொண்டிருக்கையில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து அங்கு நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *