மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

பொது இடங்களில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிமை உண்டு

பொது இடங்களில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிமை உண்டு

பொது இடங்களில் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்கர்களுக்கு அடிப்படை உரிமை உண்டு என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு கடும் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கடுமையாக வலியுறுத்தினார்.

கடந்த மே 24ஆம் தேதி டெக்சாஸின் உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். சில நாட்களுக்கு பிறகு ஒரு சூப்பர் மார்கெட்டில் நடக்கவிருந்த துப்பாக்கிச்சூட்டை தக்க சமயத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தடுத்ததால், பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் துப்பாக்கி குறித்த கடுமையான சட்டங்களை கொண்டு வர மக்கள் போராட்டங்களைக் கையிலெடுத்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அந்த பள்ளி தற்போது இடிக்கப்படுவதாக அந்த நகர மேயர் கடந்த வாரம் தெரிவித்தார்.

இந்நிலையில், பொது இடங்களில் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்கர்களுக்கு அடிப்படை உரிமை உண்டு என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் இது சரியான முடிவு தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் குடும்பத்திற்கு தற்காப்பு அவசியம் என்பதற்காக இந்த தீர்ப்பை பலர் வரவேற்கின்றனர். அதே சமயம் இந்த தீர்ப்பு பல துப்பாக்கி சூடு சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெற காரணமாக இருக்கலாம் என்று சில மக்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை, சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் செனட் சபையில் ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் நிறைவேற்றினர். இந்த வார இறுதியில் இந்த மசோதாவுக்கு இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 24 ஜுன் 2022