மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி, தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், 7.7 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 60,000 கோடி) சமூகப் பணிகளுக்காக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

1988ஆம் ஆண்டு ஒரு சிறிய விவசாய வர்த்தக நிறுவனத்துடன் தொடங்கிய அதானி குழுமம், இப்போது நிலக்கரி வர்த்தகம், சுரங்கம், தளவாடங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், சமீபகாலமாக பசுமை ஆற்றல், விமான நிலையங்கள், தரவு மையங்கள் மற்றும் சிமென்ட் ஆகியவற்றில் பரவியிருக்கும் ஒரு கூட்டு நிறுவனமாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கௌதம் அதானி தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் சமூகப் பணிகளுக்காக சுமார் 60,000 கோடி ரூபாய் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக அதானி அறக்கட்டளையால் இந்த நன்கொடை நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கௌதம் அதானி கூறுகையில், "இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் ஒரு அறக்கட்டளைக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய பண மாற்றம் இதுவாகும். மேலும் இந்த அர்ப்பணிப்பு தனது தந்தை சாந்திலால் அதானியின் பிறந்த நூற்றாண்டு ஆண்டை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்படுகிறது" என்று கூறினார்.

மேலும், "இந்தத் தொகையை சரியாக நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளோம். மேலும் இந்தக் குழுவில் அதானி குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் துணைப் பாத்திரங்களில் செயல்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தங்கள் செல்வத்தின் பெரும் பகுதியை பொதுநலனுக்காக அர்ப்பணித்த மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் வாரன் பஃபெட் போன்ற உலகளாவிய பில்லியனர்களின் வரிசையில் தற்போது கௌதம் அதானியும் இணைந்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வெள்ளி 24 ஜுன் 2022