மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா!

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா இன்று (ஜூன் 24) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஜூன் 25) மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

வங்கி கடன் கோரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். மேலும், 18 வயது முதல் 50 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் வங்கிக் கடன் வழங்க ஆவன செய்யப்படும். வேலைவாய்ப்பு கோரும் மாற்றுத்திறனாளிகள் உரிய அசல் சான்றுகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

-ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 24 ஜுன் 2022