மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

கிச்சன் கீர்த்தனா: செள செள சப்ஜி

கிச்சன் கீர்த்தனா: செள செள சப்ஜி

புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்று எந்த சுவையும் இல்லாத செள செளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. மேலும் அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட இந்த செள செளவில் சப்ஜி செய்து ருசிக்கலாம்; ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். குறிப்பாக இந்த சப்ஜி நீரிழிவாளர்களுக்கு ஏற்ற சிறந்த உணவு.

என்ன தேவை?

செள செள - ஒன்று

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

சாம்பார்தூள் - இரண்டு டீஸ்பூன்

கடலை மாவு - இரண்டு டேபிள்ஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

செள செளவைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். வாணலியியை லேசாகச் சூடாக்கி அதில் கடலை மாவு சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய செள செளவைச் சேர்த்து வதக்கவும். செள செள லேசாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து இரண்டு முறை தண்ணீர் தெளித்து மூடிவைத்து வேகவிடவும். செள செள நன்கு வெந்ததும் அதில் சாம்பார்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி விடவும். பின்பு வறுத்த கடலை மாவு சேர்த்து நன்கு புரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: முட்டைகோஸ் பட்டாணி சப்ஜி

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வெள்ளி 24 ஜுன் 2022