குரங்கு அம்மை நோய் அவசரநிலையாக அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பில் கொரோனா காலகட்டத்தின் போது உருவாக்கப்பட்ட விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு, குரங்கு காய்ச்சலை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்பட்ட இந்த குரங்கு அம்மை நோயானது முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது. பின்னர் பல நாடுகளில் வேகமாக பரவியது. தற்போது 58 நாடுகளில் பரவி உள்ளதால் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசரக் குழு கூட்டம் இன்று கூட்டப்பட்டது.
கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் பரவலை அவசரநிலையாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து இன்று கூட்டம் கூட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குரங்கு அம்மை நோயை உலகளவில் அவசர நிலையாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 52 நாடுகளில் 3417 பேருக்கு உறுதியான இந்த குரங்கு அம்மை தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்பட்ட இந்த குரங்கு அம்மை நோய் ஆனது உலக அளவில் 52 நாடுகளில் தற்போது பரவி உள்ளது. மேலும் இந்த நோய் பாதிப்பின் வாராந்திர விகிதம் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நோய் ஒரு நாடு அல்லது ஒரு பிராந்தியத்திற்கு மட்டும் பரவாமல் உலகளவில் பரவும் அபாயம் உள்ளது. இனி குரங்கு அம்மை நோய் குறித்து உலகில் எங்கு அறியப்பட்டாலும் அங்கு உடனடி நடவடிக்கைகளால் கண்காணிக்க வேண்டும். இந்த குரங்கு அம்மை நோயை உலகளவில் அவசர நிலையாக அறிவிக்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.