மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

கிழக்கு உக்ரைனில் இருந்து 20 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

கிழக்கு உக்ரைனில் இருந்து 20 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

உக்ரைன் மீது ரஷ்யா 120ஆவது நாளாக போர் நடத்தி வருகிறது. உக்ரைன் நாடு நேட்டோவில் இணையக்கூடாது என்ற ரஷ்ய நாட்டின் வலியுறுத்தலை ஏற்காததால் தான் இந்தப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா பல முயற்சிகள் செய்தும் அது தோல்வியில் முடிந்ததால், தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் கடும் தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. குறிப்பாக கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியை கைப்பற்ற தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது ரஷ்யா.

அந்தப் பகுதிக்கு எந்த உதவிகளும் வர முடியாதபடி இந்தப் பகுதியில் உள்ள அனைத்து பாலங்களையும் ரஷ்யா தகர்த்தது. இருப்பினும் உக்ரைன் ராணுவ வீரர்கள் டான்பாஸ் பகுதியை பாதுகாக்க கடுமையாக போராடி வருகின்றனர். இதன் காரணமாக டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 20 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்ய நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்குகிறது. இதில், உக்ரைன் நாட்டை வேட்பாளராக, 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நடைமுறைகள் முடிந்து இறுதி கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும், ஆனால் உக்ரைன் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று தான் விண்ணப்பம் அளித்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு இன்றைய மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

வியாழன் 23 ஜுன் 2022